புதன், 30 செப்டம்பர், 2015

விரைந்து பாயும் விண்கலம் நீ!

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -

                 விரைந்து பாயும் விண்கலம் நீ!

குட்டிவிதை முட்டியெழும் மண்ணைக் கீறி! 
குருவிகளும் கூடுகட்டும் மரத்தின் மீதில்!
பட்டுவிட்ட தாவரமும் தளிர்க்கும் மண்ணில்!
              படர்ந்திடவோர் கொழுகொம்பு கொடிகள் தேடும்!
 கட்டுடைத்த தண்ணீரும் வேக மாகக்                 
காட்டாற்று வெள்ளம்போல் சீறிப் பாயும்!
தொட்டவுடன் சுருங்கநீயும் சிணுங்கி யல்ல!   
                    தொடர்ந்துவரும் தோல்விகண்டு துவண்டி டாதே!

சனி, 26 செப்டம்பர், 2015

-வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி போட்டிக்கு எழுதப்பட்ட கவிதை -  

முயன்று வெல்வாய் ஞாலமதை! 

வெடித்துச் சிதறும் எரிமலைநீ!
     விரக்தி எதற்கு மானிடனே?
   அடித்து விரட்டு வேற்றுமையை!
        ஆணவம் எதற்கு மானிடனே!     
ஒடித்துப் போடு சாதியினை!
    உயர்த்து நல்ல நீதியினை!
  குடித்துக் குடித்துச் சீரழிந்தாய்!
        குடியை உயர்த்து ஆண்மகனே!



      படித்து உயர்த்து மொழியினையே!
          பண்பில் உயர்ந்த தமிழினையே!
    நடித்துக் கெடுக்கும் நரிகளினை
          நயமாய் ஏய்க்கும் பேய்களினை
       கடித்துக்    குதறு   புலியெனவே!
     களத்தில் காட்டு வீரமதை!
    முடித்து வைப்பாய் தீமைகளை!
         முயன்று வெல்வாய் ஞாலமதை!


தடைக ளேது நீயெழுந்தால்
       தவிடு பொடியாய் உடைபடுமே!
   விடைகள் எல்லாம் மிகவிரைவாய்! வியந்து வருமே உன்செயலால்!
 உடைக்க வேண்டும் கொடுமைகளை!   
   உரைக்க வேண்டும் உண்மைகளை!  
 படைக்க வேண்டும் புதுமைகளை!   
        பாரில் முற்றும் புதியனவாய்!           
        (அறுசீர் விருத்தம்)

 உறுதிமொழி:
இந்த  படைப்பு தமது சொந்தப் படைப்பே என்றும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும், “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்றும் உறுதி மொழி என்னால் வழங்கப்படுகிறது. 
                                                             - மகா சுந்தர்  

Related Posts Plugin for WordPress, Blogger...